Friday 3rd of May 2024 08:16:53 PM GMT

LANGUAGE - TAMIL
-
அமெரிக்காவில்   நேற்றும்  69,000 பேருக்கு கொரோனா தொற்று!

அமெரிக்காவில் நேற்றும் 69,000 பேருக்கு கொரோனா தொற்று!


அமெரிக்காவில் நேற்று வெள்ளிக்கிழமை 69 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டனா்.

அமெரிக்காவில் தொடா்ந்து மூன்றாவது நாளாகவும் முன்னைய தொற்று நோயாளா் தொகையை முறியடித்து புதிய தொற்று நோய்கள் சாதனை மட்டத்துக்கு உயா்ந்து வருகின்றன.

அலாஸ்கா, ஜோர்ஜியா, இடாஹோ, அயோவா, லூசியானா, மொன்டானா, ஓஹியோ, உட்டா மற்றும் விஸ்கான்சின் ஆகிய ஒன்பது அமெரிக்க மாகாணங்களில் நேற்று முன்னொருபோதும் இல்லாத அளவு அதிகளவு தொற்று நோயாளா்கள் பதிவாகினர்.

இந்நிலையில் தொற்று நோய் தீவிர அச்சுறுத்தல் காரணமாக சிறைச்சாலைகளில் உள்ள 8,000 கைதிகளை முதல் கட்டமாக விடுவிப்பதாக கலிபோர்னியா மாகாண அரசு நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தது.

சான் பிரான்சிஸ்கோவிற்கு வெளியே உள்ள சான் குவென்டின் சிறைச்சாலையில் சுமார் 3,300 கைதிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19)



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE